சேலம்

மேட்டூர் அனல் மின்நிலையம் 2-வது பிரிவில் மின் உற்பத்தி தொடக்கம்

DIN

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையம் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு அலகுகளும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவை மூலம் 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த நிலையில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த வாரம் இரண்டாவது பிரிவில் உள்ள 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் மின் உற்பத்திப் பணி  நிறுத்தப்பட்டது. இந் நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் இப்  பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டதாக அனல் மின் நிலையப் பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT