சேலம்

கொண்டையம்பள்ளி அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

DIN

சேலம் கல்வி மாவட்ட அளவில் அக்டோபர் 10, 11-ஆம் தேதிகளில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
அதில் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் 14 வயதுக்குள்பட்ட பிரிவில் தடை தாண்டும் போட்டியில் தி. ரேவதி முதலிடமும், மு. ராஜேஸ்வரி இரண்டாம்  இடமும் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை கமலவேணி, உதவி தலைமை ஆசிரியர் ராமசந்திரன், உடற்கல்வி ஆசிரியைகள் மற்றும் இருபால்  ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
மேலும் முதலிடம் பெற்ற மாணவி தி. ரேவதி ஒசூரில் மண்டல அளவில்  16 மற்றும் 17-ஆம் தேதியில் நடைபெறும் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT