சேலம்

சேலம் அரசுப் பொறியியல் கல்லூரிக்கு தேசிய தரமதிப்பீட்டுக் குழுவினர் பாராட்டு

DIN

சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழுவினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
தேசிய அளவிலான தரப்பட்டியலில் இடம்பிடிக்கும் வகையில், சேலம் அரசுப் பொறியியல் கல்லூரி குறித்த விவரங்களுடன் அண்மையில் தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழு இரு நாள்கள் இக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
காக்கிநாடா ஜவாஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எஸ்.எஸ். குமார் தலைமையில் ஆய்வுக் குழுவினர் 2-வது நாளாக சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வை நிறைவு செய்த குழுவினர் ஆய்வறிக்கையை, கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லினிடம் வழங்கினர். அப்போது, தேசிய தர மதிப்பீட்டு மற்றும் தர நிர்ணயக்குழுவின் தலைவர்  பேராசிரியர்  வி.எஸ்.எஸ். குமார் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏழை மாணவர்கள் தரமான தொழில்கல்வி பயிலும் வகையில், இக்கல்லூரியின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் கூறினார். ஆய்வறிக்கை தேசிய தரமதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழுவின் தலைமையகத்தில் அளிக்கப்பட்டு அதன் முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லின் தெரிவித்தார்.
ஆய்வின் போது, துணை முதல்வர் ஆர்.விஜயன்,தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளர் வி.ராஜ்குமார், பேராசிரியர்கள் டி. ஷோபா ராஜ்குமார்,  சி.வசந்தநாயகி,வி.கீதா, பி.சுந்தரராஜ்,ஆர்.விமலா,ஏ.எம்.கல்பனா,எஸ்.லீமா மேரி, கல்லூரி முதல்வரின்  நேர்முக உதவியாளர் அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT