சேலம்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு புதன்கிழமை காலை நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகவும், இது சனிக்கிழமை காலை நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நொடிக்கு 13,047 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 104.18 அடியாகவும், நீர்இருப்பு 70.65 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT