முகப்பு
சேலம்

இனி தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன்

சினிமாவை இரண்டாவதாக வைத்துக் கொண்டு,  இனி தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:36 AM
பகிர்:

சினிமாவை இரண்டாவதாக வைத்துக் கொண்டு,  இனி தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் அவர் "செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கட்சி தொடங்கி 14 ஆண்டுக் காலம் முடிந்து விட்டது.  தற்போது வனவாசம் முடிந்து,  விடிவு காலம் பிறந்து விட்டது.  அரசியல்வாதி என்பதைவிட, ஆன்மிகவாதி என்பதால் யோசித்துத்தான் பேசுவேன். 
அரசியலில் ஜாம்பவான்கள் காலத்திலேயே போராடிய தனக்கு, போராட்டம் ஒன்றும் புதிதல்ல.  திமுக செயல் தலைவராக இருந்தவர் தற்போது தலைவராகியுள்ளார்.  கருணாநிதி இல்லாத அரசியல் களம் என்பது புதிது. 
தலைவர் என்ற பொறுப்பு சுட்டெரிக்கும் நெருப்பு ஆகும்.  மு.க.ஸ்டாலினின் செயல்பாடு இனி எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  தனிப்பட்ட விஷயத்தில் முதல்வர் கே.எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
சினிமாவை இரண்டாவதாக வைத்துக்கொண்டு, இனி தீவிர அரசியலில்  ஈடுபடப் போகிறேன்.  மேலும், சிம்புவின் வளர்ச்சியைத் தாங்க முடியாதவர்கள், அவரைச் சுற்றி சதி வலை பின்னப் பார்க்கிறார்கள் என்றார் ராஜேந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.