சேலம்

சங்ககிரி மலையில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி மாத பிறப்பினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு தொடங்கியது.
இக்கோயிலில் அதிகாலையில் சுப்ரபாரத சேவையுடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது. அதனையடுத்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. பூஜைகளில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மலையடிவாரத்தில் இருந்து சுவாமிக்கு தேவையான அபிஷேக, ஆராதனைப்பொருட்களை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். மலைக்கு சென்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் 29-வது ஆண்டாக காலை, மதியம் அன்னதானமும், லட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டன. பாதைகளை செப்பனிடாததால் பக்தர்கள் மலை ஏறுவதில் சிரமமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT