சேலம்

குடிநீர் பிரச்னை: ஆத்தூர் நகராட்சியைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

தினமணி

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி வாழ் மக்களுக்கு குடிநீர் முறையாக வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேமுதிக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு உயர்மட்ட குழு உறுப்பினரும், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான ஏ.ஆர். இளங்கோவன் தலைமை வகித்தார்.
 ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி வாழ் மக்களுக்கு குடிநீர் முறையாக வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பெட்ரோல்,டீசல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய,மாநில அரசுகளையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
 ஆத்தூர் நகரச் செயலாளர் வி.எஸ்.சீனிவாசன் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் சோலைசந்திரன், ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் பி. குமாரசாமி, நரசிங்கபுரம் நகரச் செயலாளர் டி.மாதேஸ்வரன் ஆர்.எல்.வெங்கடேசன், எம்.முருகன்,ஜெ.ரஜினிகுமார்,எம்.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலிக்குடங்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மெடிக்கல் அன்பு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT