சேலம்

திருப்பூர் ரயில் நிலையத்துக்கு சிறந்த பராமரிப்பு விருது

DIN

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட  பெரிய ரயில் நிலையங்களில் திருப்பூர் ரயில் நிலையத்துக்கும், சிறிய ரயில் நிலையங்களில் கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்துக்கும் சிறந்த பராமரிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், 64 ஆவது ரயில்வே வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களுக்கு 14 விருதுகள் வழங்கப்பட்டன.
சேலம் ரயில்வே கோட்டத்தில், சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வரும் பெரிய ரயில்வே நிலையங்களில் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு சிறந்த பராமரிப்பு விருது வழங்கப்பட்டது.
அதேபோல, சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் சிறிய ரயில் நிலையங்களில் குளித்தலை ரயில் நிலையம் விருதைப் பெற்றுள்ளது.  இதில் திருப்பூர் ரயில் நிலைய மேலாளர் சுனில் தத்,  குளித்தலை ரயில் நிலைய மேலாளர் நாயக் ஆகியோர் கோட்ட மேலாளர் யு. சுப்பாராவிடம் இருந்து விருதுகளைப் பெற்றனர்.
இத்துடன் சிறந்த சேவை புரிந்த ஊழியர்கள் 400 பேருக்கும்,  11 அலுவலர்களுக்கும் விருது,  பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் பேசுகையில்,  "தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் சேலம் ரயில்வே கோட்டம் சிறந்த ஒட்டுமொத்த விருதைப் பெற்று சிறப்புச் சேர்த்துள்ளது.  இதற்கு அனைத்து பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களின் பங்களிப்பே காரணமாகும்' என்றார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை,  கோட்டப் பணியாளர் நல அலுவலர் எஸ். திருமுருகன் உள்ளிட்ட  அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT