சேலம்

உலக உடலுறுப்பு நன்கொடையாளர் தின நிகழ்ச்சி

DIN


 சேலத்தில் உலக உடலுறுப்புகள் நன்கொடையாளர் தினத்தையொட்டி உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த தெரு நாடக விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
உலக உடலுறுப்பு நன்கொடையாளர் தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும்  சி.எஸ்.ஐ யங் இந்தியன்ஸ் என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் குழுவின் ஆதரவோடு உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டிலும் இக்குழு சார்பில் உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த தெரு நாடக நிகழ்ச்சி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை சேலம் மாநகர காவல் ஆணையர் த.செந்தில்குமார் கொடியேற்றி துவக்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து, இக்குழு சார்பில் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புண்ரவு நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஹரி ஜானகிராமன்,  யி சேலம் அத்தியாயம் மற்றும் சேலம் கோபி ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அசோக்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரையாற்றினர். 
நிகழ்ச்சியில் மகேந்திரா பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.வி.மகேந்திர கவுடா, யி சேலம் அத்தியாயத்தின் தலைவர் அஜய் எல் ராஜ்பால் மற்றும் இணைத் தலைவர் அபிஷேக் ராஜ்வீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT