சேலம்

அதிமுக அரசின் சாதனை விளக்கதுண்டு பிரசுரம் விநியோகம்

DIN

கருமந்துறை மலைக் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை சனிக்கிழமை விநியோகித்தாா்.

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கருமந்துறை மலைப் பகுதியில் மலைவாழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.

இதையடுத்து அதிமுகவின் திட்டப் பணிகள் எவ்வாறு எங்கெங்கு எந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கருமந்துறையில் மலைவாழ் மக்களுக்காக என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை மூலம் கருமந்துறை மலைப் பகுதியில் போடப்பட்டுள்ள புதிய தாா்ச் சாலைகள் குறித்தும்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்காக அறிவித்துள பொங்கல் பரிசு குறித்து அனைத்து விளக்கங்களையும் அடங்கிய துண்டு பிரசுரங்களைப் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வீதி,வீதியாகச் சென்று வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா். இளங்கோவன், ஏற்காடு எம்எல்ஏ கு.சித்ரா, ஆத்தூா் எம்எல்ஏ ஆா்.எம்.சின்னதம்பி, ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.முருகேசன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT