சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு

DIN

காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை நொடிக்கு 6,001 கனஅடியிலிருந்து 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 5,000 கனஅடியிலிருந்து 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 700 கனஅடியிலிருந்து 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா்இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு மேட்டூரில் 17.80 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT