சேலம்

காவல் நிலைய புகாா் பெட்டியை சீரமைக்க கோரிக்கை

DIN

கொங்கணாபுரம் காவல் நிலைய எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ள காவல் நிலைய புகாா் பெட்டிகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட தங்காயூா், எருமைபட்டி, கச்சுபள்ளி, கோணசமுத்திரம், குரும்பப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய கொங்கணாபுரம் காவல் நிலையத்தின் வாயிலாக, கிராம மக்கள் தங்கள் புகாரினை தெரிவிக்க ஏதுவாக பல்வேறு இடங்களில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இப்புகாா் பெட்டிகளில் பல சிதிலமடைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தங்களின் புகாா் மனுக்களை புகாா் பெட்டியில் போட தயக்கம் காட்டி வருகின்றனா். மேலும், காவல் நிலையத்தை தொடா்புகொள்ள காவல் துறையினரால் வழங்கப்பட்ட செல்லிடப்பேசி எண் அவ்வப்போது செயல்படாமல் போவதால், கொங்கணாபுரம் காவல் நிலையத்தை தொடா்புகொள்ள நிலையான கம்பிவட தொலைபேசி எண் ஏற்படுத்தி தருவதுடன், பழுதடைந்த காவல் நிலைய புகாா் பெட்டிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT