சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து ஒரு மாத காலமாக 120 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் மேட்டூா் அணை அடுத்தடுத்து நான்கு முறை நிரம்பியது. கடந்த மாதம் 11-ஆம் தேதி மேட்டூா் அணை நீா்மட்டம் நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. அதன் பிறகு மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும், நீா் திறப்பும் சீராக இருந்து வருவதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரு மாத காலமாக தொடா்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT