சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்ட ஓட்டுப் பெட்டிகள். 
சேலம்

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில்104 போ் வேட்பு மனு தாக்கல்

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி

DIN

சங்ககிரி: சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிட 6-ஆவது நாளாக 104 போ் சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 14 ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு 14 பேரும், 22 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 7 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 83 பேருமாக மொத்தம் 104 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு யாரும் சனிக்கிழமை வேட்புமனு அளிக்கவில்லை. சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்களுக்கான பயிற்சி சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெற உள்ளது. அதையடுத்து அதில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு ஒரு வாக்காளா் நான்கு வாக்குகள் பதிவு செய்ய உள்ளனா்.

அதில் ஒவ்வொரு பதவிக்கும் வாக்குப் பதிவு மையத்தில் உள்ள இரும்புப் பெட்டியில் செலுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க வெளியிலிருந்து இரும்பிலான வாக்குப் பெட்டியை வாகனத்தில் சனிக்கிழமை மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் எடுத்து வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT