சேலம்

மகுடஞ்சாவடியில் முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் குறித்து ஆட்சியர்  ஆய்வு

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ஜனவரி 16-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கும்  அரசு விழா நடைபெறும் இடத்தை  மாவட்ட ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்கள்  மற்றும் கட்சி கூட்டங்களில் பங்கேற்க ஜனவரி 13-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் வருகிறார். இதையடுத்து, ஜனவரி 16-ஆம் தேதி  அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடி பகுதிகளில் மேம்பாலம் கட்ட   பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடக்கி வைத்தும்  அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும் முதல்வர்  வருகை தர உள்ளார்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில்  மகுடஞ்சாவடியில் விழா நடைபெறும் இடத்தை மாவட்ட  ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ், சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா மற்றும்   அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT