சேலம்

ரயில் நிலையங்களில் குடிநீர் பாட்டில்கள்விற்பனை குறித்து சோதனை

DIN

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் தரமான குடிநீர் பாட்டில்கள் விற்பனைசெய்யப்படுகின்றனவா? என  சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் இ. ஹரி கிருஷ்ணன் மற்றும் ரயில்வே கோட்ட பாதுகாப்பு கமாண்டர் எச். சீனிவாச ராவ் ஆகியோர் உத்தரவின்பேரில் தரமற்ற மற்றும் போலியான குடிநீர் பாட்டில் விற்பனை குறித்து கடந்த ஜூலை 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பெரிய மற்றும் சிறிய என அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள நடைமேடைகள் மற்றும் ரயில்களில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் பாட்டில்களின் தரம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தரமில்லாத மற்றும் போலியான நிறுவன குடிநீர் பாட்டில் விற்பனையைத் தடுக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் தரமற்ற குடிநீர் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேபோல ரயில் நீர் முறையாக பயணிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல தரமற்ற மற்றும் போலியான குடிநீர் விற்பனை குறித்தும் அதிக விலைக்கு குடிநீர் பாட்டில்கள் விற்பனை குறித்தும் 138 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ரயில் நிலையங்களில் நடைமுறைகள் மற்றும் ரயில்களில் தரமான குடிநீர் பாட்டில் விற்பனை குறித்து அடிக்கடி சோதனை மேற்கொள்ளப்படும் என ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ. ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT