சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 722 கன அடியாகச் சரிவு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 722 கன அடியாகச் சரிந்தது.
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த லேசான மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 100 கன அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து நொடிக்கு 930 கன அடி வரை அதிகரித்தது.  தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால்,  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.
புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 722 கன அடியாகச் சரிந்தது.  அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர்மட்டம் 45.53 அடியாகவும்,  நீர் இருப்பு 15.11 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT