சேலம்

1,2 -ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டப் பயிற்சி

DIN

தமிழகம் முழுவதும் 1,2-ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்த பயிற்சிகள்  இன்று முதல் துவங்க உள்ளன.
 தமிழகம் முழுவதும் கடந்த கல்வியாண்டில் 1, 6,9,11-ஆம்  வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதையடுத்து நடப்பு கல்வியாண்டில் எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல வகுப்புகளுக்கு இன்னும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விநியோகம் செய்யப்படவில்லை.
அவைகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் 1, 2 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இருநாள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாய்க்கன்பாளையம் ஒன்றியங்களைச் சேர்ந்த 1,2 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆத்தூர் அருகே கிரீன்பார்க் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜூன் 19, 20 ஆம் தேதிகளில் இருநாள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT