சேலம்

வனத் துறை கடனுதவி

DIN

வனத்துறை மூலம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் வன உள்கோட்டத்துக்குள்பட்ட தம்மம்பட்டி வனச்சரகத்தின் மூலம் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் காந்திநகர் கிராம வனக் குழுவிலுள்ள 64 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மற்றும் நாகியம்பட்டி தண்ணீர்த்தொட்டிக்காடு கிராம வனக்குழுவில் 18 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.19.6  லட்சம் கடன்தொகையை கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மருதமுத்து செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு, தம்மம்பட்டி வனச்சரகர் அசோக்குமார் தலைமை வகித்தார். செந்தாரப்பட்டி பிரிவு வனவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கூடமலை ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT