சேலம்

கோனேரிப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிகழாண்டுக்கான முதல் பருத்தி ஏலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 300 பருத்தி மூட்டைகள் ரூ. 7 லட்சத்துக்கு விற்பனையாகின.
இந்த ஏலத்தில் நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி, பூதப்பாடி, ஊமாரெட்டியூர், வெள்ளி திருப்பூர்,  கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கொள்முதல் செய்யப்பட்ட 300 மூட்டைகள் 75 குழுவாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 5,300-ம் அதிகபட்ச விலையாக ரூ. 5,700 வரையுமாக மொத்தம் ரூ. 7 லட்சத்துக்கு விற்பனையாகின.
பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோனேரிப்பட்டி கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடை
பெறும் ஏலத்தில் பங்கேற்று பயனடையுமாறும். மேலும் அடுத்த ஏலம் கோனேரிப்பட்டி பருத்தி ஏல மையத்தில் ஜூன் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT