சேலம்

கடத்தூரில் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

வீரபாண்டி ஒன்றியம், கடத்தூர் ஊராட்சிப் பகுதியில் மாட்டு இனங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாட்டு இனங்களான பசு, காளை மாடு, எருமை உள்ளிட்ட 600 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
இந்தத் தடுப்பூசியானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் போடப்படும். இந்த முகாமை சேலம் மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் புருஷோத்தமன் துவக்கி வைத்தார். மேலும், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் தேவேந்திரன், கால்நடை மருத்துவர்கள் தயாளன், ரமேஷ், விவேகானந்தன், கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT