சேலம்

மக்களவைத் தேர்தல்: அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

மக்களவைத் தேர்தல் தொடர்பாக, எடப்பாடி தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி  கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

DIN

மக்களவைத் தேர்தல் தொடர்பாக, எடப்பாடி தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி  கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள  முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர சிறப்புப் பூஜையில் பழனிசாமி பங்கேற்று,  தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து,  அவர் தனது வீட்டில் எடப்பாடி தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் தேர்தல் பணி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 
பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் பூலாம்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகரும் உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதியுமான போட் மணி தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100 பேர் அதிமுகவில் இணைந்தனர். அப்போது, முதல்வர் கே.பழனிசாமி பேசியது:-
அதிமுகவில் இணைந்துள்ளவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு,  உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து,  கோவையில் உயிரிழந்த அதிமுக எம்எல்ஏ கனகராஜுக்கு அஞ்சலி செலுத்த காரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT