வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலில் சனிக்கிழமை பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம் பிருந்தாவன் சாலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், நூற்றுக்கும்மேற்பட்டோர் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஊர்வலமானதுபிருந்தாவன் சாலையின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.