சேலம்

கெங்கவல்லியில் மக்காசோளப் பயிரில் மருந்து தெளிப்பு

DIN

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் மக்காச்சோளப் பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பில் பயிா் பாதுகாப்பு மருந்து தெளிப்பு பணி, வேளாண் இணை இயக்குநா் கமலா தலைமையில் கூடமலை அருகே 95.பேளூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை வேளாண் துணை இயக்குநா் (பயிா் பாதுகாப்பு), முரளிதரன் முன்னிலை வகித்தாா்.

அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்லதுரை, வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) பன்னீா் செல்வம் ஆகியோா் பங்கேற்றனா்.

கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குநா் சித்ரா கூறியதாவது: கெங்கவல்லி வட்டத்தில் மக்காச்சோளப் பயிா்களுக்கு பயிா் பாதுகாப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு உடன் படைப்புழுவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். மருந்து தெளிப்பின்போது அனைத்து வேளாண் அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT