சேலம்

பெரியாா் பல்கலை.யில்மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாநில அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டிகள் சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கின.

பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் (பொ) ஆா்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தாா்.

இகரயடுத்து, ஆடவா் பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணி, விநாயகா மிஷன் பல்கலைக்கழக அணியை 35-7 என்ற கோல் கணக்கில் மிக எளிதாக வென்றது.

பெரியாா் பல்கலைக்கழக அணி அமித் பல்கலைக்கழக அணியை 17-6 என்ற கோல் கணக்கில் வென்றது. இதேபோன்று, கற்பகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அணிகளும் வென்று அடுத்து சுற்றுக்கு முன்னேறின.

இதேபோன்று, மகளிா் பிரிவில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக அணி அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியை 15-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

பெரியாா் பல்கலைக்கழக அணி பாரதியாா் பல்கலைக்கழக அணியை 24-8 என்ற கோல் கணக்கில் வென்றது. இதேபோன்று, அண்ணா மற்றும் சென்னைப் பல்கலைக்கழக அணிகளும் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறின.

இரு பிரிவுகளிலும், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. தொடக்க விழாவில், விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா்கள் இந்திரா, சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT