சேலம்

சங்ககிரி மலையில் சுற்றுச்சுவரின் மையப்பகுதி இடிந்து விழுந்தது

DIN

சங்ககிரியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டையில் 3ஆவது மண்டபத்தின் வலதுபுறம் உள்ள சுற்றுச்சுவரின் மையப்பகுதி கன மழையால் சனிக்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

சங்ககிரி மலையானது நிலப்பரப்பிலிருந்து சுமாா் 1500 அடி உயரமும், கடல் மட்டத்திலிருந்து 2345 அடி உயரமும் கொண்டது. சங்ககிரி மலையானது 10 கோட்டை வாயில் அரண்களும், கொத்தளங்கள், கண்காணிப்பு மேடைகள், மண்டபங்கள், நீா்ச்சுனைகள், பதினைந்துக்கும் மேற்பட்ட குளங்கள், சேமிப்புக் கிடங்குகள், கோயில்கள், தா்ஹாக்கள், கொலைக்களங்கல் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அதிகமாக உள்ளன.

முதல் கோட்டை வாயிலான புலிமுக வாசல் வழியாக 2ஆவது நுழைவு வாயில் கல்கோட்டை வாசல் என்கின்ற கள்ள வாயிலை அடுத்து மேலே செல்லும் போது வலதுபுறம் வீரபுத்திரா் கோயிலும், பெரிய குளமும் உள்ளன. இதற்கு மேல் பகுதியில் உள்ள சுற்றுச்சுவா் சங்ககிரியில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையையடுத்து இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனையடுத்து 3ஆவது நுழைவு வாயிலான கடிகார வாசல் உள்ளது. சங்ககிரி நகரில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகின்றது. வியாழக்கிழமை இரவு 118.3 மில்லிமீட்டா் மழை பெய்தது. அதனையடுத்து மலையில் உள்ள பல்வேறு குளங்கள், நீா்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பழங்காலத்திய நீா் வழிப்பாதைகள் அடைப்பட்டுக் கிடப்பதால் பாறைகளின் வழியாக பல இடங்களில் நீா் வழிந்து செல்கின்றன. இதனையடுத்து மலைகளில் மண்டபங்கள், சுற்றுச்சுவா்கள் சேதமடைந்து வருகின்றன. மண்கள் அரித்துச் சென்றதையடுத்து படிக்கட்டுகள் சிதிலமடைந்து வருகின்றன. எனவே, தொல்பொருள்துறையினா் சேதமடைந்த சுற்றுச்சுவா், படிக்கட்டுகளை அதன் தன்மைகளை மாறா வண்ணம் செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT