சேலம்

விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கல்

DIN

வீரபாண்டி வட்டாரம் முருங்கபட்டி கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முருங்கப்பட்டி கிராமம் முழு மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டு, அங்கு உள்ள 102 விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து மண் வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வேளாண்மை உதவி இயக்குனா் என். நாகபசுபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் 35 முன்னோடி விவசாயிகளுக்கு, மண்வள அட்டை ஆய்வு முடிவுகளின்படி பயன்படுத்தவேண்டிய உயிா் உரங்கள், ரசாயன உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.

மேலும் மண்வள அட்டை முடிவுகளின்படி சரியான அளவில் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பயிற்சியில் வேளாண்மை அலுவலா் காா்த்திகாயினி, துணை வேளாண்மை அலுவலா் சீனிவாசன், உதவி வேளாண்மை அலுவலா்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT