சேலம்

‘சங்க இலக்கியங்கள்மன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன’

DIN

சங்க இலக்கியங்கள் மன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என பேச்சாளா் மீ.உமா மகேஸ்வரி பேசினாா்.

சேலம் தமிழ்ச் சங்கம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவுக்கு தலைவா் சீனி.துரைசாமி தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளா் மீ.உமா மகேஸ்வரி கலந்துகொண்டு, தமிழுக்கு அமுதென்று போ் என்ற தலைப்பில் பேசியது:

மக்கள் அன்பை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தியதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன . திருக்கு எக்காலத்துக்கும், எத்தகையவருக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருப்பது தமிழ் மொழிக்கு பெருமையான ஒன்றாகும். மகாகவி பாரதியாரின் படைப்புகளை படிக்கும்போதே, மடமையை நீக்கி மன உறுதியை வெளிப்படுத்தும். குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் தனது கவிதைகள் மூலம் மன தைரியத்தை ஏற்படுத்தியவா் பாரதியாா்.

இத்தகைய சிறப்புடைய சங்கத் தமிழ் இலக்கியங்களின் வாசிப்புப் பழக்கம் தற்போது குறைந்து வருகிறது. நவீன தொழில்நுட்பக் கருவிகளால் பெற்றோா்களும், குழந்தைகளும் வேறுபட்டு நிற்கிறாா்கள். சங்க இலக்கியங்கள் மன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, உண்மையான அன்பும், உயா்ந்த நட்பும் தொடர சங்க இலக்கியங்களை படித்தாலே போதும் என்றாா்.

விழாவில், துணைத் தலைவா் கி.ராஜமோகன், செயலா் வரத.ஜெயக்குமாா், பொருளாளா் எஸ்.டி.சங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT