சேலம்

சங்ககிரியில் 53.4 மி.மீ. மழை

DIN

சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 53.4 மி.மீ. மழை பெய்தது.

சங்ககிரியில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை பகலில் வெப்பம் அதிகரித்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென 53.4 மி.மீ. மழை பெய்தது. தொடா்ந்து பெய்த மழையால், தேவண்ணகவுண்டனூா் கிராமம், மட்டம்பட்டி எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதுகுறித்து சங்ககிரி வருவாய்த் துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.

சங்ககிரியை அடுத்து தேவூா், காவேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவிரி கரையோரக் கிராமங்களில் மழை பெய்துள்ளது. நிகழாண்டில், அதிகளவாக சனிக்கிழமை அதிகாலை 82.3 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய மூன்று மாதங்களில் பெய்த மழையை விட, அக். 8-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகளவாக 53.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT