சேலம்

சங்ககிரியில் செப்.13இல் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

DIN

சங்ககிரி ஒன்றியம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம், சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
 இது குறித்து சங்ககிரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட வட்டார வள மையம் சார்பில் கூறியுள்ளதாவது:-
 சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான இலவச மருத்துவ முகாம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயதுக்குள்பட்ட பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் மனவளர்ச்சி குறைபாடுகளுடைய குழந்தைகளை பொதுமக்கள் அழைத்து வரவேண்டும். முகாமிற்கு வருபவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஐந்து, ரேஷன் கார்டு நகல் இரண்டு, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT