சேலம்

சங்ககிரி வட்டத்தில் 93.1 மில்லி மீட்டர் மழைப் பதிவு

DIN

சங்ககிரி நகரில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை 17.1 மில்லி மீட்டர் மழை பெய்தது.
சங்ககிரி நகரில்  திங்கள்கிழமை இரவு 17.1 மில்லி மீட்டர் மழை பெய்தது. இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. மழை பெய்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டிருந்தது.
தேவூரில் 76 மில்லி மீட்டர் மழை:  சங்ககிரி வட்டம், தேவூர் பகுதியில் திங்கள்கிழமை இரவு அதிகளவாக 76 மில்லி மீட்டர் மழை பெய்தது. தேவூர், காவேரிப்பட்டி, புள்ளாகவுண்டபட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் காவேரி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளன.  தொடர்ந்து தேவூர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதையடுத்து விவசாய பணிகளைத் தொடங்க ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சங்ககிரி வட்டத்தில் அதிகளவாக தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது. இப்பகுதிகளில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு நீர் வருவதால் அதனையும் விவசாயிகள் பயன்படுத்தி நெல் நடவு செய்யும் பணிகளில்
ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT