சேலம்

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பேரிடர் கால  மீட்பு ஒத்திகை

DIN


 காவிரியில் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதியில், வெள்ளிக்கிழமை பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 
மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து கூடுதலான அளவில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  வெள்ளப் பெருக்கு காலங்களில்,  தண்ணீரில் சிக்கிய நபர்களை மீட்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் குறித்தும், எடப்பாடி தீயணைப்புத் துறை சார்பில் நேரிடை செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் நடைபெற்ற மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை எடப்பாடி வட்டாட்சியர் கோவிந்தராஜன் தொடக்கிவைத்தார். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் சிக்கிய நபர்களை மீட்கும் பல்வேறு வழிமுறைகளை செய்துகாட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT