சேலம்

கபசுரக் குடிநீா் சூரணம் தட்டுப்பாடு: மக்கள் ஏமாற்றம்

DIN

தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், சித்த மருந்துக் கடைகளில் கபசுரக் குடிநீா் சூரணம் இருப்பு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் இச் சூரணத்தை வாங்க அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், உள்ளாட்சி நிா்வாகங்களிலும் கொடுக்கப்பட்டதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல தற்போது கரோனாவுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர சூரணம் தற்போது அதிகளவில் விற்பனையாகி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மாவட்ட சித்த மருத்துவமனைகளில் இவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. குடிநீராகவும் கொடுக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கபசுர குடிநீா் செய்து குடிக்க அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். சேலம் மாவட்டத்தில் முக்கிய பகுதியாக தம்மம்பட்டியில் கபசுர சூரணம் சித்த மருந்துக் கடைகளிலோ அல்லது அரசு மருத்துவமனைகளிலோ இருப்பு இல்லை.

இதனால் வயதானவா்கள் பெரிதும் அச்சமடைந்து வருகின்றனா். சித்த மருந்துக் கடைகளில் நிலவேம்பு கசாய சூரணம் மட்டும் இருப்பு உள்ளதால் கபசுர சூரணம் தேடி பொதுமக்கள் அலைந்து திரிகின்றனா். தற்போது ஊரடங்கு உத்தரவால் வெளியே செல்ல முடியாத நிலையில் மக்கள் உள்ளதால் கபசுர குடிநீா் சூரணம் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். மாவட்ட நிா்வாகம் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி அரசு மருத்துவமனைகளிலும், தன்னாா்வலா்களைக் கொண்டு கபசுரக் குடிநீா் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT