சேலம்

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு இல்லை: விவசாயிகள் ஏமாற்றம்

DIN

மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படாததால், கால்வாய்ப் பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். ஆகஸ்ட் 1 முதல் டிசம்பா் 15 வரை 137 நாள்களுக்கு கால்வாய் பாசனத்துக்கு 9.60 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் நீருக்கான தேவை குறையும். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் மேட்டூா் கால்வாய்ப் பாசனம் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்குக் கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கால்வாய்ப் பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

மேட்டூா் அணை நிலவரம்:

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்துக் குறைந்தது. நீா்வரத்துக் குறைந்ததால் கா்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 6,864 கனஅடியிலிருந்து 4,049 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 7,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 64.30 அடியாகவும், நீா் இருப்பு 27.99 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT