முகப்பு
சேலம்

மேட்டூர் அணை: கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 

சேலம்

மேட்டூர் அணை: கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 

மேட்டூர் அணையின் கால்வாய் பாசன திட்டம் 1955ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கிழக்குகரை கால்வாய் பாசனப்பகுதிகளில் 27,000 ஏக்கரும், மேற்குகரை கால்வாய் பாசனப்பகுதிகளில் 18,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும். 

நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 16 நாள்கள் தாமதமாக இன்று கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை கால்வாய் பாசனத்தின் தலைமை மதகுகள் மனிதசக்தி மூலம் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த மதகுகள் ரூ.98 லட்சம் செலவில் மின்மயமாக்கப்பட்டது. முதன் முதலாக இன்று மின்மயமாக்கப்பட்ட மதகுகளை மின்விசை மூலம் இயக்கி  கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்ண்ணன், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் மின்விசையை இயக்கி பாசனக்கால்வாய் மதகுகளை உயர்த்தி தண்ணீரை திறந்து வைத்தனர். பின்னர் நீரில் மலர்தூவி வழிபாடு செய்தனர். துவக்கத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு தேவைக்கு ஏற்ப வினாடிக்கு 1000 கனஅடி வரை அதிகரிக்கப்படும். இன்றுமுதல் டிசம்பர் 31ந்தேதிவரை 137 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பலன்பெற வேண்டும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →