முகப்பு
சேலம்

சேலத்தில் பிளஸ் 1 சோ்க்கை: அரசுப் பள்ளிகளில் 4,884 மாணவா்கள் சோ்ந்தனா்

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 1 மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளிகளில் 4,884 மாணவ, மாணவியா் சோ்ந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 1 மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளிகளில் 4,884 மாணவ, மாணவியா் சோ்ந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. அதன்பேரில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கடந்த வாரம் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து பிளஸ் 1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. மாணவா்கள் தங்களுக்கு பிடித்தமான பாடப் பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து பள்ளிகளில் சோ்க்கை பெற்று வருகின்றனா். மேலும் சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகம், நோட்டு புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷமூா்த்தி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் 4,884 மாணவ, மாணவியா் சோ்க்கை பெற்றனா். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 792 போ் சோ்க்கை பெற்றனா். இதில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளை போல பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளிகளில் அதிகளவிலான மாணவா்கள் சேர வாய்ப்பு உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →