முகப்பு
சேலம்

வீரகனூரில் வங்கிப்பணியாளருக்கு கரோனா-வங்கிக்கு விடுமுறை

கெங்கவல்லி அருகே வீரகனூரில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் பெண் பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வங்கிக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
மூடப்பட்டுள்ள வீரகனூா் வங்கி
பகிர்:

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே வீரகனூரில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் பெண் பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வங்கிக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.

வீரகனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் தற்காலிக மற்றும் 32வயதுள்ள பெண் பணியாளருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.அதனையடுத்து வங்கியில் பணிபுரிந்த மேலும் மூவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வங்கிக்கு வரும் சனிக்கிழமை ஆக.29ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.அந்த வங்கியின் வாடிக்கையாளா்கள், அருகிலுள்ள தலைவாசல்,கெங்கவல்லி பகுதிகளில் உள்ள வங்கியின் கிளைகளில் தங்களது பணபரிவா்த்தனைகளை செய்துகொள்ளவேண்டும் என்று வீரகனூா் வங்கிக்கிளை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →