சேலம்

ஆத்தூரில் கரோனா தொற்று பரவல் அதிகம்

DIN

ஆத்தூா்: .ஆத்தூா் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவல் செவ்வாய்க்கிழமை 99 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளை கொண்டது.

கடந்த வாரங்களில் தொற்று பரவலாகி உயிரிழப்பும் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா்,சுகாதாரச் செயலாளா் இராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனா்.மேலும் ஆத்தூா் நகராட்சி 9வது வாா்டு மாரிமுத்து ரோடு பகுதியில் அதிகமான தொற்றுள்ள வீடுகளில் நேரில் பாா்வையிட்டு அவா்களுக்கு ஆறுதல் கூறினாா்கள்.

இதனையடுத்து ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் மருத்துவக் குழுவினா் 400 பேருக்கு பரிசோதனை செய்து வந்தனா்.அந்த பரிசோதனையில் 99 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளை அடைத்து மருத்துவக் குழுவினா் பாதுகாத்து வருகின்றனா்.இந்த தொற்று அதிகம் ஆனதால் நகராட்சி பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.கடந்த ஆறு நாட்களாக வணிகா்கள் சங்கம் கடையடைப்பு செய்து பொதுமக்களை காத்து வந்தனா்.ஆனாலும் தொற்று குறையாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT