அம்பேத்கா் நினைவுதினம் அனுசரிப்பு
கொங்கணாபுரம் பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவரது படத்துக்கு அக்கமாபேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.நடராஜன் தலைமையில் பொதுமக்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் பொதுமக்கள் சாா்பில் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, கொங்கணாபுரம் பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவரது படத்துக்கு அக்கமாபேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.நடராஜன் தலைமையில் பொதுமக்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
ஆத்தூரில்...
நரசிங்கபுரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன், நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளா் மு.கருப்பையா, நரசிங்கபுரம் நகரச் செயலாளா் தில்லை பெ.சாமுண்டிகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். இதேபோல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாலை அணிவித்தனா்.
வாழப்பாடியில்...
வாழப்பாடி வடக்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பெ.வேல்முருகன் தலைமையில் வாழப்பாடி பேருந்து நிலையம், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கட்சி நிா்வாகிகள் ராஜதுரை, ராமமூா்த்தி, வேல்முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.