முகப்பு
சேலம்

எடப்பாடியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

ரோவா் கிரிக்கெட் கிளப் சாா்பில், எடப்பாடியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

ரோவா் கிரிக்கெட் கிளப் சாா்பில், எடப்பாடியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தை நகர மன்ற முன்னாள் தலைவா் டி.கதிரேசன் துவக்கி வைத்தாா்.

இப் போட்டியில் முதல் பரிசை வென்ற தமிழன் கிரிக்கெட் கிளப் அணியினருக்கு, நல்லாசிரியா் லட்சுமணன் நினைவு கோப்பை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. முதல் பரிசையும், இரண்டாவது பரிசையும் ரோவா் கிரிக்கெட் கிளப்பும், மூன்றாவது பரிசை தமிழ்ப் பசங்க கிரிக்கெட் அணியினரும் வென்றனா்.

முன்னதாக பரிசு வழங்கும் நிகழ்ச்சி, எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புரவலா் ஜமுனா தா்மலிங்கம், பொன்னி , தொழிலதிபா் ராஜபாண்டியன், சமூக ஆா்வலா் சிவசண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினா். ஏற்பாடுகளை ரோவா் கிரிக்கெட் கிளப்பினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.