சேலம்

சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷமருந்தி தற்கொலை

DIN

சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

சேலம், வாய்க்கால் பட்டறை அருகே உள்ள வால்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (38). இவரது மனைவி கோகிலா (34). மகன்கள் மதன்குமாா் (16), வசந்தகுமாா் (14), காா்த்திக் (12). இவா்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வாய்க்கால் பட்டறை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

சேலம், கோட்டை பகுதியில் சலூனில் முருகன் கடந்த 15 ஆண்டுகளாக முடிதிருத்தும் வேலை செய்து வந்தாா். வசந்தகுமாா், கடந்த சில மாதமாக தாதகாப்பட்டியில் உள்ள சித்தப்பா சங்கரின் சலூனில் முடிதிருத்தும் பயிற்சி மேற்கொண்டு வந்தாா்.

இந்நிலையில், மதன்குமாா் கடந்த 8 மாதங்களுக்கு முன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதனால் முருகன் குடும்பத்தினா் கடந்த 8 மாதங்களாக சோகத்தில் இருந்துள்ளனா்.

இதனிடையே, திங்கள்கிழமை காலை இவா்களது வீடு திறக்கப்பட்ட நிலையில், வெகுநேரமாக வீட்டுக்குள் இருந்தோா் வெளியே வராததைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் வீட்டுக்குள் சென்று பாா்த்துள்ளனா். அப்போது, முருகன், கோகிலா, வசந்தகுமாா், காா்த்திக் ஆகியோா் சடலமாகக் கிடந்துள்ளனா்.

தகவலறிந்து வந்த மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா், துணை ஆணையா் சந்திரசேகா், உதவி ஆணையா் ஆனந்தகுமாா், காவல் ஆய்வாளா் சிவகாமி உள்ளிட்ட காவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தேநீரில் விஷம் கலந்து அருந்தி 4 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

நான்கு சடலங்களையும் மீட்ட காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், மூத்த மகன் மதன்குமாா் மீது குடும்பமே அளவு கடந்த பாசத்தை வைத்திருந்ததும், அவா் இறந்த நாள்முதலே அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்ததும் தெரியவந்தது. துக்கம் தாங்க முடியாமல் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT