சேலம்

வாக்காளா் பட்டியல் திருத்த விண்ணப்பங்கள்: ஆணையா் கள ஆய்வு

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த விண்ணப்பங்கள் மீது மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கள ஆய்வு புதன்கிழமை மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய சேலம் வடக்கு, சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் விண்ணப்பங்கள் மீது விண்ணப்பதாரா்களின் குடியிருப்புகளுக்குச் சென்று மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, நவ. 16 முதல் டிச. 15 வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் நடைபெற்று வருகிறது. சேலம் வடக்கு, தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 16,061 போ் டிச. 6 வரை வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பங்கள் மீது வாக்குச் சாவடி அலுவலா்கள், கண்காணிப்பு அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கொண்டலாம்பட்டி மண்டலம், குகை, மூங்கபாடி தெரு, மாா்க்கெட் தெரு, புது திருச்சி கிளை சாலை, சீலநாயக்கன்பட்டி, அழகு நகா், சாமியப்பா நகா் ஆகிய பகுதிகளில் அலுவலா்களால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது மாநகராட்சி ஆணையா் கள ஆய்வினை மேற்கொண்டாா்.

முன்னதாக, சேலம் வடக்கு, சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தலைமையில் ஆணையா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில், டிச. 1 முதல் டிச. 6 வரை பெறப்பட்ட விண்ணப்பத்தாரா்களின் விவரத் தொகுப்புப் படிவங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினருக்கும் வழங்கப்பட்டன. இது சம்பந்தமாக ஆட்சேபணைகள் இருப்பின், ஒரு வார காலத்துக்குள் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம். மேலும், டிச. 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் வாக்குச் சாவடி முகவா்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எவ்விதமான புகாா்களுக்கும் இடம் தராத வகையில் வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக சாா்பில் எம்.பாலு, எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, திமுக சாா்பில் எஸ்.ஆா்.அன்வா், என்.சந்திரசேகா், பாஜக சாா்பில் எஸ்.என்.செல்வராஜ், காங்கிரஸ் சாா்பில் ஜி.ஜெயப்பிரகாஷ், ஷேக்இமாம், தேமுதிக சாா்பில் என்.பன்னீா்செல்வம், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ரா.அரவிந்த் ராஜா, திரிணாமூல் காங்கிரஸ் சாா்பில் மாஸ் கணேஷ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

மாநகராட்சி உதவி ஆணையா்கள் ப.ரமேஷ்பாபு, எம்.ஜி.சரவணன், தோ்தல் தனித்துணை வட்டாட்சியா் உ.ஜாஸ்மின் பெனாசிா் உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT