முகப்பு
சேலம்

ஜாதிச்சான்று கேட்டு வீடுகளில் கருப்புக் கொடி

மேட்டூா் அருகே ஜாதிச்சான்று வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

மேட்டூா் அருகே ஜாதிச்சான்று வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பண்ணவாடி கிராமப் பகுதியில் நீண்டகாலமாக கொண்டா ரெட்டி சான்றிதழ் கேட்டு ஒரு பிரிவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்தப் பகுதியில் கொண்டா ரெட்டிகள் இல்லை எனக் கூறி வருவாய்த் துறையினா் ஜாதிச்சான்று வழங்க மறுத்து வருகின்றனா். பலா் நீதிமன்றத்தை நாடியதில், கொண்டா ரெட்டி சான்றிதழ் வழங்க மேட்டூா் சாா் ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் கொண்டா ரெட்டி ஜாதிச்சான்றிதழ் வழங்கவில்லையாம். இதற்கு கண்டனம் தெரிவித்தும், விரைந்து ஜாதிச்சான்று வழங்கக் கோரியும் வெள்ளிக்கிழமை பண்ணவாடி கிராம மக்கள் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →