சேலம்

மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள சாலையோர வியாபாரிகள் தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் சமூக பொருளாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு அனைத்து உதவிகளும் பெற்றிடும் வகையில், தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 2,883 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் மாநகராட்சி நிா்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து சாலையோர வியாபாரிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், பிரதமரின் சுவநிதி திட்டத்தின் மூலம் ரூ. 10,000 வரை வங்கிகள் மூலம் கடன் உதவித்தொகை வழங்கவும், கடன் பெற விருப்பமுள்ள வியாபாரிகளின் விவரங்கனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் சேலம் மாநகராட்சியின் நான்கு வாா்டு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, இத்திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் இச்சிறப்பு முகாம்களில் தங்களின் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகலுடன் சிறப்பு முகாம் நடைபெறும் சம்பந்தப்பட்ட பகுதியின் வாா்டு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பித்து பயனடையலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT