மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,583 கன அடியாகச் சரிவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,583 கன அடியாகச் சரிந்துள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,583 கன அடியாகச் சரிந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 106.75 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,745 கன அடியிலிருந்து 1,583 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீா் இருப்பு 73.86 டி.எம்.சி.யாக உள்ளது.