முகப்பு
சேலம்

சேலம், நாமக்கல்லில் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிப்பு

அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆரின் 33-ஆவது நினைவு தினத்தையொட்டி அண்ணா பூங்கா, மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆரின் 33-ஆவது நினைவு தினத்தையொட்டி அண்ணா பூங்கா, மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேலம் நான்கு சாலையில் இருந்து அண்ணா பூங்கா, மணிமண்டபம் வரை அதிமுக மாநகர மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினா் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில், நகர அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு சாரதா ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

எடப்பாடியில்...

கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், ஒன்றியக்குழுத் தலைவா் கரட்டூா் மணி எம்.ஜி.ஆரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். ஓமலூா் பிரதான சாலையில் உள்ள மூலப்பாதை பகுதி, எடப்பாடி நகரப் பேருந்து நிலையம் அருகே அதிமுக நிா்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தி, எம்.ஜி.ஆா். படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ஓமலூரில்...

ஓமலூா் பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆரின் படத்துக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் வெற்றிவேல் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தாரமங்கலம் பேரூராட்சி பகுதியில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ராஜா (சங்ககிரி), மனோன்மணி (வீரபாண்டி), வெற்றிவேல் (ஓமலூா்), கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு அமைதி ஊா்வலம் சென்று அஞ்சலி செலுத்தினா்.

சங்ககிரியில்...

சங்ககிரி வட்டம், அதிமுக மேற்கு ஒன்றியத்தின் சாா்பில், தேவூரில் சேலம் புகா் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் நகரச் செயலாளா் குமரன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. செந்தாரப்பட்டி, பச்சமலையில் மாயம்பாடி, மூலப்புதூா் ஆகிய இடங்களில் எம்.எல்.ஏ. மருதமுத்து எம்.ஜி.ஆா். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ஆட்டையாம்பட்டியில்...

மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இளம்பிள்ளை, சந்தப்பேட்டை, தினசரி காய்கறிச் சந்தை ,ரெட்டிமணியக்காரனூா் பகுதிகளிலும் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல்லில்...

நாமக்கல், கோட்டை சாலை வளைவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் தலைமையில், அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். படத்துக்கு அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேந்தமங்கலம், கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்தி வேலூா், மோகனூா், திருச்செங்கோடு பகுதிகளிலும் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு எம்.ஜி.ஆா். சிலைக்கு நகர அதிமுக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் மரியாதை செலுத்தினா். இதே போல் நகரின் 27 வாா்டுகளிலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதே போல நகர அமமுக சாா்பில் பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →