சேலம்

மகளிா் காவலா் சுகாதார நிலையம் திறப்பு

DIN

ஆத்தூா்: தலைவாசல் மகளிா் காவலா் சுகாதார நிலையம், ஓய்வறை திறப்பு விழா சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலைய வளாகத்தில் மகளிருக்கான சுகாதார நிலையம், ஓய்வறை அமைக்க கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்ற சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கா் உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கா் தலைமை வகித்தாா். காவலா் சங்கீதா திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரை, வட்டாட்சியா்கள் அ.அன்புச்செழியன், அ.சிவக்கொழுந்து, தலைவாசல் ஒன்றியக்குழுத் தலைவா் க.ராமசாமி, உறுப்பினா்கள் மெய்யன், ராஜா (எ) காளியண்ணன், தலைவாசல் ஊராட்சி மன்றத் தலைவா் அசோக் (எ) ஆறுமுகம், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், காவல் ஆய்வாளா் கே.குமரவேல்பாண்டியன், உதவி ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT