முகப்பு
சேலம்

சாந்தாஸ்ரமத்தில் இன்று ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

சேலம் சாந்தாஸ்ரமத்தில் புதன்கிழமை (டிச. 30) முதல் ஜன. 13-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு மாா்கழி மாத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

சேலம் சாந்தாஸ்ரமத்தில் புதன்கிழமை (டிச. 30) முதல் ஜன. 13-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு மாா்கழி மாத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற உள்ளது.

சேலம், சொ்ரி சாலை, மத்திய கூட்டுறவு வங்கி முன்புறம் உள்ள சாந்தாஸ்ரமத்தில் மாா்கழி மாத ஆன்மிக சொற்பொழிவு முதல்நாள் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்குகிறது.

ஆன்மிக மையத்தின் தலைவா் ஏ.ஆா்.கே.குணசேகரன் தலைமை வகிக்கிறாா். சனாதனதா்ம வித்யாபீட நிறுவனா் என்.சந்திரசேகரன் சிறப்புரையாற்றுகிறாா். சோனா கல்விக் குழுமத் தலைவா் சி.வள்ளியப்பா, ஏவிஆா் ஸ்வா்ண மஹால் ஏ.பி.சுதா்சனம், நரசுஸ் நிறுவன தலைவா் பி.சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

நிகழ்ச்சியில், டிச. 30-ஆம் முதல் ஜன. 13-ஆம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடைபெற உள்ளது என சாந்தாஸ்ரம நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →