சித்த மருத்துவ தினம்
ஏற்காட்டில் தேசிய சித்த மருத்துவ தினம், சித்த மருத்துவ முகாம் படகு இல்ல அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம்சித்த மருத்துவ தினம்
ஏற்காட்டில் தேசிய சித்த மருத்துவ தினம், சித்த மருத்துவ முகாம் படகு இல்ல அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏற்காட்டில் தேசிய சித்த மருத்துவ தினம், சித்த மருத்துவ முகாம் படகு இல்ல அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சித்ரா தலைமை வகித்தாா். ஊராட்சிக் குழு உறுப்பினா் சாந்தவள்ளி அண்ணாதுரை, ஊராட்சித் தலைவா் சிவசக்தி ரவிசந்திரன், மருத்துவ அலுவலா் மருத்துவா் தாம்சன், சித்த மருத்துவ அலுவலா் குமாா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சித்த மருத்துவத்தின் நன்மைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இதில் சித்த மருத்துவா்கள் ராமு, கண்ணன், வெற்றிவேந்தன், பாலமுருகன், சியாமளாகொளரி கலந்துகொண்டனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.