முகப்பு
செய்திகள்

ஹார்ட் பீட் நாயகியின் கொலைச்சேவல் வெளியீட்டுத் தேதி!

ஹார்ட் பீட் நாயகியின் கொலைச்சேவல் படத்தின் வெளியீடு தொடர்பாக...

Updated On : 4 மார்ச் 2026, 3:38 pm IST
கொலைச்சேவல் போஸ்டர்
பகிர்:

ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு நடிக்கும் கொலைச்சேவல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வி.ஆர். துதிவாணன் எழுதி, இயக்கும் படத்தில், கலையரசன் நாயகனாக நடிக்கிறார். கொலைச்சேவல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு நடிக்கிறார்.

ஹார்ட் பீட் இணையத் தொடரில் ரீனா பாத்திரத்தில் நடித்து பிரபலமான தீபா பாலு, கொலைச்சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Advertisement

Advertisement

இப்படத்தை ஆர்பி பிலிம்ஸ், ஆர்பி பாலா தயாரிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு பி.ஜி. முத்தைய்யா ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைக்கிறார். திருப்பங்கள் நிறைந்த காதல் கதையாக கொலைச்சேவல் படம் எடுக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கொலைச்சேவல் திரைப்படம் வரும் மார்ச் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

summary

The release date of Kalaiyarasan's film Kolaicheval has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.